லண்டனில் ஊபர் வாடகை கார் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்திய நிறுவனமான ஓலா, அங்கு சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலா நிறுவனம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாடகை கார் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், விரைவில் லண்டன் நகரிலும் சேவையை தொடங்கவுள்ளதாக ஓலா அறிவித்துள்ளது. இதற்காக தங்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், கார்களுடன் தேவை என்றும் விளம்பரம் செய்துள்ளது.