\
துபாயை மூடிய பனி மூட்டம்: வீடியோ வெளியிட்ட இளவரசர்!

துபாயை மூடிய பனி மூட்டம்: வீடியோ வெளியிட்ட இளவரசர்!

துபாயை மூடிய பனி மூட்டம்: வீடியோ வெளியிட்ட இளவரசர்!
Published on

துபாயை முழுவதுமாக பனி மூடியிருக்கும் அழகிய வீடியோவையும் புகைப்படத்தையும் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் வானிலை திடீரென மாறியுள்ளது. எப்போதும் வெயில் கொளுத்தும் அங்கு, இன்று காலை கடும் பனிமூட்டமாகக் காணப்பட்டது. துபாயை, போர்வை போல பனி மூடியிருந்தது. இதற்காக வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. நகரத்தின் சில பகுதிகளில், காலை 8 மணிவரை பனி படர்ந்து இருக்கும் என்றும் வாகனங்களில் வெளியே செல்வோர் கவனமாகச் செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம் துபாயை பனிமூடியிருக் கும் புகைப்படத்தையும் வீடியோவையும் சமூக வலைத்தில் வெளியிட்டுள்ளார். ’இன்றைய துபாய் இப்படி இருக்கிறது’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, வைரலாகி வருகிறது.

வெக்கையில் வாழும் துபாய்வாசிகளுக்கு இந்தத் திடீர் பனிமூட்டம் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com