முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப உள்ள யூ.ஏ.இ!

முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப உள்ள யூ.ஏ.இ!

முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப உள்ள யூ.ஏ.இ!
Published on

வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்ப உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். 

விண்வெளி திட்டத்தில் கால்பதிக்க வேண்டும் என்பது யூ.ஏ.இ.,யின் நீண்ட நாள் கனவாகும். இதனையடுத்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டது யூ.ஏ.இ. சுமார் 4000-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் இருவரை மட்டும் விண்வெளிக்க அனுப்ப திட்டமிட்டது. அதன்படி ஹஜ்ஜா, சுல்தான் ஆகிய இருவரின் பெயர்களை கடந்த செப்டம்பரில் வெளியிட்டது  யூ.ஏ.இ. 

இந்நிலையில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி விண்வெளி வீரர்களில் இருவரில் யாரேனும் ஒருவர் விண்வெளி பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யன் சோயூஷ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ள வீரரின் பெயர் செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யூ.ஏ.இ தன் முதல் செயற்கைக்கோளை கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானிலிருந்து செலுத்தியது. 2020-ம் ஆண்டு செவ்வாய் கோளுக்கும் செயற்கை கோளை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் 2117-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் குடியேறி அங்கு சுமார் 6,00,000 நகரங்களை உருவாக்க வேண்டும் என்றும் யூஏஇ தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பேசிய யூஏஇயின் பிரதமர் ஷேக் முகமது, அடுத்த 5 வருடத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள்  சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com