\
அமெரிக்க போர்க் கப்பலால் தென் சீன கடல்பகுதியில் பதற்றம்

அமெரிக்க போர்க் கப்பலால் தென் சீன கடல்பகுதியில் பதற்றம்

அமெரிக்க போர்க் கப்பலால் தென் சீன கடல்பகுதியில் பதற்றம்
Published on


தென் சீன கடல்பகுதியில் சீனா எழுப்பி வரும் செயற்கை தீவு அருகே அமெரிக்க போர்க் கப்பல் கடந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அண்டை ‌நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அப்பகுதியில் செயற்கை தீவுகளை எழுப்பி வருகிறது. அப்பகுதி வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்லவும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. ‌இந்நிலையில் அமெரிக்காவின் போர்க்கப்‌பல் சீனாவின் செயற்கை தீவுக்கு வெகு அருகே சென்றபடி தென் சீனக் கடல் பகுதியை கடந்துள்ளது. கடந்த முறை 12 நாட்டிக்கல் தொலைவுக்கு அப்பால் அமெரிக்காவின் போர்க் கப்பல் சென்றபோது தங்கள் நாட்டின் இறை‌யாண்மையில் குறுக்கீடுவதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com