இர்மாவை தொடர்ந்து தாலிம் புயல்: ஜப்பானுக்கு எச்சரிக்கை!
இர்மாவை தொடர்ந்து தாலிம் புயல் பசுபிக் பெருங்கடலில் ஏற்படவுள்ளதாகவும், இதனால் ஜப்பானுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் வீசிய இர்மா புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தப் புயலின் தாக்கம் அடங்குவதற்குள், பசுபிக் பெருங்கடலில் தாலிம் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடக்கும்போது 150 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.