ஃபங்- வோங் புயல்
ஃபங்- வோங் புயல்web

தைவானை நோக்கி நகர்ந்துவரும் ‘ஃபங்- வோங்’ புயல்.. 8,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் அடைக்கலம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸை தாக்கிய ஃபங்-வோங் புயல் தற்போது தைவானை நோக்கி நகர்ந்துவருகிறது..
Published on

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸை தாக்கிய ஃபங்-வோங் புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.. 230 கிமீ வேகத்தில் மிகப்பெரிய சூறாவளியாக சுழன்றடித்த ஃபங்-வோங் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேரை காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்தசூழலில் பிலிப்பைன்ஸை கடந்திருக்கும் ஃபங்-வோங் புயல் வலுவிழந்தநிலையில், தற்போது தைவானை நோக்கி நகர்ந்துவருகிறது.. இந்தசூழலில் பாதுகாப்பு காரணமாக 8000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்..

ஃபங்-வோங் (Fung wong) புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தைவானின் கரையோரப் பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வலிமை குறைந்து, தைவானை நோக்கி புயல் நகர்ந்துவரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஃபங் - வாங் புயல்
ஃபங் - வாங் புயல்

இதற்கிடையே, யிழனின் (YILAN) மாகாணத்தில் கனமழையால் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம்சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி உள்ளது. மழையால்பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com