\
Typhoon Dolphin
Typhoon DolphinReuters

சீனாவை புரட்டிப்போட்ட டால்பின் புயல்: 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

சீனாவில் ஏற்பட்டுள்ள டால்பின் புயலால் ஜெஜியாங், ஷாங்காய் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சாலைகள் வெள்ளத்தில் மூழ்க, அவசர மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Published on

சீனாவின் கிழக்குப் பகுதிகளை கடுமையாக தாக்கிய டால்பின் புயல், ஜெஜியாங் மாகாணத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் ஜெஜியாங், ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். 313 மி.மீ வரை மழை பதிவாகி சாலைகள் வெள்ளத்தில் மூழ்க, 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர் - M. மீரா

சீனாவின் கிழக்குப் பகுதிகளை ‘டால்பின்’ (Dolphin) புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த ஆண்டில் சீனாவை தாக்கிய சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் டால்பின், ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் மணிக்கு சுமார் 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது. இதையடுத்து கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Typhoon Dolphin
Typhoon DolphinReuters

ஜெஜியாங் மாகாணத்தின் வென்ழோ நகரில் மட்டும் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். ஷாங்காயிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். புயலால் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், நிலச்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது.

ஷாங்காயில் 24 மணி நேரத்தில் சுமார் 313 மி.மீ மழை பதிவாகி புதிய சாதனை படைத்தது. நகரின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. ஜெஜியாங் மட்டுமின்றி ஜியாங்சு, அன்ஹுய், ஹெனான், ஹூபே, ஷான்டாங் உள்ளிட்ட மாகாணங்களிலும் கனமழை தொடர்ந்தது. சில பகுதிகளில் புதன்கிழமை வரை 400 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

Typhoon Dolphin
Typhoon DolphinReuters

மேலும், கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. புயல் சீனாவின் மத்தியப் பகுதிகளை நோக்கி நகர்வதால், ஹூபே மற்றும் ஹெனான் உள்ளிட்ட மாகாணங்களிலும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Typhoon Dolphin
போர் நீண்டால் பேராபத்து! “ஈரான் வெல்லும்; அமெரிக்கா வீழும்!” – டிரம்ப்புக்கு எதிராக வெடித்த குரல்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com