இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தை: 38 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் சந்திப்பு

இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தை: 38 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் சந்திப்பு

இரண்டு வயதில் கடத்தப்பட்ட குழந்தை: 38 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோருடன் சந்திப்பு
Published on

இரண்டு வயதில் கடத்தப்பட்டக் குழந்தை 38 ஆண்டுகளுக்குப்பிறகு பெற்றோருடன் இணைந்த சம்பவம் சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஜின் சுய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இரண்டு வயது குழந்தையாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். பறிதவித்துப்போன பெற்றோர் சீனா முழுக்க பல்வேறு வகையில் தேடிப் பார்த்தும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

1982 ஆம் ஆண்டு மே மாதம் வடமேற்கு சீனாவில் ஏழைக்குடும்பமான சு பிங்டே வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பி வரும்வரை அவரது மனைவி கதவை பூட்டாமல் விட்டிருக்கிறார். குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிவிட்டார். தூங்கி எழுந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்தவர்கள் இத்தனை வருடங்கள் தேடிக்கொண்டே வந்துள்ளனர். இதனால், சு பிங்டேவின் மனைவிக்கு மனநல பாதிப்புகளும் வந்துள்ளன.

இந்நிலையில், இத்தனை ஆண்டுகளுக்குப்பின்பு சீன தேசிய டி.என்.ஏ மையத்தின் பரிசோதனை மூலம் காணாமல் போன ஜின் சுய் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டிபிடிக்கப்பட்ட ஜின் சுய்க்கு தற்போது திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். இரண்டு வயதில் தொலைத்த மகனோடு பேரக்குழந்தைகளையும் சந்தித்த மகிழ்ச்சியில் சு பிங்டே குடும்பத்தினர் உள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com