வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: அக்.2-ல் விசாரணை தொடக்கம்

வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: அக்.2-ல் விசாரணை தொடக்கம்
வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: அக்.2-ல் விசாரணை தொடக்கம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கொலை வழக்கு விசாரணைக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இரு பெண்கள் மீது வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மலேசிய நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க இருக்கிறது. வியட்நாமை சேர்ந்த ஹுவாங், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆயிஷா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த கிம் ஜாங் நம் மீது வி.எக்ஸ். என்ற நச்சு திரவத்தைப் பீய்ச்சி அடித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த குற்றத்தில் தாங்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com