அமெரிக்காவில் சீஸ் பதுக்கிய பெண்கள் கைது: எத்தனை டன்கள்?

அமெரிக்காவில் சீஸ் பதுக்கிய பெண்கள் கைது: எத்தனை டன்கள்?

அமெரிக்காவில் சீஸ் பதுக்கிய பெண்கள் கைது: எத்தனை டன்கள்?

அமெரிக்க நாட்டில் இரண்டு பெண்கள் 49.1 டன் அமெரிக்கன் சீஸ் ஸ்லைஸ், 22.3 டன் பிண்டோ பீன்ஸ், 1.6 டன் ஃபோல்ஜர்ஸ் காபி மற்றும் 1.4 டன் இன்ஸ்டான்ட் மேஷ் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் 5,000 கேலன் மைனஸை (Mayonnaise) வைத்திருந்த குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரியவந்துள்ளது. 

அந்த நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த Ana Rioja மற்றும் Maria Consuelo de Ureno என்ற இரண்டு பெண்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அரசால் வறுமையில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற சத்துணவு உதவித் திட்டத்தின் (Supplemental Nutrition Assistance Program - SNAP) கீழ் கொடுக்கப்பட உணவுகளில் முறைகேடு செய்துள்ளனர். சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர்கள் இருவரும் இதை செய்து வந்ததாக தெரியவந்தது. அப்படி அவர்கள் பெற்ற உணவுகளை அமெரிக்க நாட்டின் எல்லைப் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இவையனைத்தும் போலீசாரின் விசாரணையில் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதோடு அவர்கள் செய்த குற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆனது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் Ana Rioja-வுக்கு 30 மாதங்களும் மற்றும் Maria Consuelo de Ureno-வுக்கு 37 மாதங்களும் சிறை தண்டனை விதித்துள்ளனர். 

அதே போல வேறொரு வழக்கில் அமெரிக்காவில் கொரோனா கால நிவாரண கடனை பெற்ற நபர் ஒருவர் அந்த தொகையை கொண்டு லம்போர்கினி மற்றும் சில சொகுசு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக 9 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com