இங்கிலாந்து பூங்காவில் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய இரண்டு பெண்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் இளம்பெண் ஒருவரை இரண்டு பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடித்து உதைக்கும் பெண்கள்
அடித்து உதைக்கும் பெண்கள்twitter

டியானோ (deano) என்ற ட்விட்டர் பயனர் அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவுடன், இது என் இளைய தங்கைக்கு கடந்த வாரம் ஏற்பட்ட சம்பவம் என்று தெரிவித்திருக்கும் டியானோ இதை அனைவரும் பகிரவும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றொரு பெண்ணைச் சரமாரியாகத் தாக்குகின்றனர். அவர்களுடைய கால்களால் அந்தப் பெண்ணின் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாகத் தாக்குகின்றனர். கைகளாலும் குத்துகின்றனர். பின்னர் அடி வாங்கும் பெண், எழுந்து உட்கார்ந்து எதையோ சொல்கிறார். அதைக் கேட்டபிறகும் அந்த இரண்டு பெண்கள் மேலும் அவரைத் தாக்குகின்றனர். பிறகு அடிவாங்கிய பெண் எழுந்து செல்கிறார். அப்போதும் அவருக்கு உதை விழுகிறது.

இறுதியில் அடி வாங்கிய பெண்ணின் கைப்பையையும் எட்டி உதைக்கப்படுகிறது. பின்னர் எல்லோரும் கலைந்து செல்கின்றனர். இதை அந்தப் பூங்காவில் இருக்கும் நபர்கள் கண்டும் தடுக்கவில்லை. இந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள், “சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

”இந்தச் சம்பவம் தற்போது நடைபெற்றது அல்ல. இது, ஒரு பழைய வீடியோ” என பயனர் ஒருவர் கருத்திட்டுள்ளார். அதற்கு மற்றொரு பயனர், “இந்த வீடியோ, கடந்த 24ஆம் தேதி இங்கிலாந்து பூங்காவில் நடைபெற்றுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் சிலர், “சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com