\
’’நீங்களே மாற்றமாக இருங்கள்’’ - முதியவருக்காக களமிறங்கிய இளைஞர்; மீண்டும் வைரலாகும் வீடியோ

’’நீங்களே மாற்றமாக இருங்கள்’’ - முதியவருக்காக களமிறங்கிய இளைஞர்; மீண்டும் வைரலாகும் வீடியோ

’’நீங்களே மாற்றமாக இருங்கள்’’ - முதியவருக்காக களமிறங்கிய இளைஞர்; மீண்டும் வைரலாகும் வீடியோ
Published on

சாலையை கடக்க முயற்சிக்கும் முதியவருக்கு இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் உதவும் பழைய வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.  

ஆங்கிலத்தில் ''be the change'' என்று சொல்வார்கள். அதாவது மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்காமல் நீங்களே மாற்றமாக இருங்கள் என்று அர்த்தம். அந்த வார்த்தைக்கு உதாரணமாக வயதான ஒருவருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நெரிசலான சாலையை கடக்க ஒரு முதியவர் நீண்ட நேரமாக முயற்சிக்கிறார். ஆனால் கார்கள் நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரை மறித்து முதியவர் சாலையை கடக்க உதவுகிறார்.

இந்த பழைய வீடியோவை ட்விட்டர் பயனாளி ஒருவர், ‘’ஒரு நபர் மாற்றத்தை உருவாக்க முடியும்’’ என்று தலைப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com