ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் அருகே சிறிய ரக விமானம் ஒன்று புல்வெளியில் விழுந்து தீ பற்றியதில் அதில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்திரேலிய நாட்டில் மெல்பெர்ன் அருகே அல்ட்ராலைட் ப்ரிஸ்டெல் எனும் சிறிய ரக விமானம் ஒன்று புல்வெளியில் விழுந்து தீ பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் பற்றிய தீயை அணைத்து அதில் இருந்த இருவரையும் மீட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் பழுது ஏற்பட்டதால் தவிர்க்க முடியாத நிலையில் புல்வெளியில் விமானம் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தில் இருந்த பைலட் மற்றும் பயிற்சியாளர் இருவரும் காயமடைந்தனர்.
இதே போன்று, நேற்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியது. இதில் கடற்கரையில் இருந்த சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.