\
china landslide
china landslideai

சீனாவில் பயங்கர நிலச்சரிவு.. 10 பேர் மாயம்.. 2 பேர் உயிரிழப்பு!

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணமடைந்தனர்..
Published on
Summary

சீனாவின் ஜியாங்சி மாகாணம் சுய்ச்சுவான் கவுண்டி காவோபிங் நகரில், 'சௌடெல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் அதிகாலை 4 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காணாமல் போயுள்ளனர். 12 வீடுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

reuters

'சௌடெல்' புயல் காரணமாகப் பெய்த தீவிர கனமழையே இந்த நிலச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். ஜியாங்சி மாகாணத்தின் சுய்ச்சுவான் கவுண்டியில் உள்ள காவோபிங் நகரில் அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டது. நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் உள்ள 12 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. வற்றில் எட்டு வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன.

நிலச்சரிவில் 10- க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகச் சீன அரசு ஊடகமான CCTV தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய அப்டேட்டின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

china landslide
ஆரஞ்சு அலெர்ட் to ரெட் அலெர்ட்.. அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை.. வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com