சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள்  2 பேர் மாயம்: பாகிஸ்தானிடம் இந்தியா முறையீடு

சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள் 2 பேர் மாயம்: பாகிஸ்தானிடம் இந்தியா முறையீடு

சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள் 2 பேர் மாயம்: பாகிஸ்தானிடம் இந்தியா முறையீடு
Published on

சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள்  2 பேர் காணாமல் போனது குறித்து பாகிஸ்தானிடம் இந்திய தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணிக்கு கிளம்பிச் சென்ற இரண்டு இந்திய சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பணியிடம் சென்று சேரவில்லை. இன்று காலை முதல் இருந்து அவர்கள் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தானிடம் இந்திய தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலக ஊழியர்கள் இரண்டு பேர், உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கையும் எடுத்தது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்ப்டடது. இந்நிலையில் இந்திய தூதரக ஓட்டுநர்கள் இன்று காணாமல் போன சம்பவம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com