'உணவு ஆர்டர் தாமதமானதால் ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்மநபர்கள்'.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

'உணவு ஆர்டர் தாமதமானதால் ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்மநபர்கள்'.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
'உணவு ஆர்டர் தாமதமானதால் ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்மநபர்கள்'.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவில் தங்களது உணவு ஆர்டர் தாமதமானதால், அடையாளம் தெரியாத இரண்டு மர்மநபர்கள் கவுன்ட்டரிலேயே ஊழியரை தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கும் இயங்கி வருகிறது ‘பர்கர் கிங்’ என்ற உணவு நிறுவனம். இந்த நிறுவனத்தின் கிளையான நியூயார்க் நகரம் லின்டன் போலிவார்டு என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் பர்கர் கிங் உணவு நிறுவனத்திற்கு கடந்த மாதம் இரண்டு நபர்கள் உணவு ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்துள்ளனர். அப்போது தாங்கள் ஆர்டர் செய்த உணவு இன்னும் வரவில்லை என்று, அந்த இருவரில் ஒருவர் ஊழியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவகையில் திடீரென மர்மநபர்களில் ஒருவர் கவுன்ட்டர் மீது ஏறி குதித்து, அங்கிருந்த 22 வயதான ஊழியரை தாக்க ஆரம்பித்தார். பின்னர் ஊழியரின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொள்ள, மற்றொரு மர்மநபர் ஊழியரின் முகத்திலேயே தாக்க ஆரம்பித்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஊழியர், மர்மநபரின் தாக்குதலால் நிலைகுலைந்தார். இதையடுத்து உடனடியாக ஓடிவந்த ஊழியர்கள் இருவர், மர்மநபர்களிடமிருந்து சக ஊழியரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அப்போதும் விடாமல் மர்மநபர்களில் ஒருவர் ஊழியரை தாக்கிக் கொண்டிருந்தார். பின்னர் ஒருவழியாக மர்மநபர்களிடமிருந்து ஊழியர் காப்பாற்றப்பட்ட நிலையில், இரண்டு மர்மநபர்களும் உணவு நிறுவனத்தை விட்டு உடனடியாக வெளியேறினர். மர்ம நபர்களில் ஒருவர் கத்தியை வைத்து தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

‘பர்கர் கிங்’ ஊழியரை தாக்கும் இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. மர்மநபர்கள் முகத்தை மூடி இருந்ததால், சிசிடிவியில் அவர்கள் குறித்து முக அடையாளம் கண்டறியப்பட முடியவில்லை. இதனால் தற்போது நியூயார்க் நகர காவல்துறையினர், இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, இவர்கள் இருவரையும் அடையாளம் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com