மியாமி கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதியில் திடீரென விழுந்த ஹெலிகாப்டர்!

மியாமி கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதியில் திடீரென விழுந்த ஹெலிகாப்டர்!

மியாமி கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதியில் திடீரென விழுந்த ஹெலிகாப்டர்!
Published on

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடலில் பட்டப்பகலில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மூன்று பேர் ஹெலிகாப்டரில் இருந்த நிலையில், படுகாயமடைந்த இருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நபர் காயமேதுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மியாமி கடற்கரை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரில் யார் ஹெலிகாப்டரை இயக்கியவர் என்பது தெளிவாக தெரியவில்லை என காவல்துறை கூறியுள்ளது. கிட்டத்தட்ட மதியம் 1.10 மணிக்கு இந்த விமத்து ஏற்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com