தினசரி பயனர்கள் - 3 ஆண்டுகளாக தவறாக கணக்கு காட்டிய ட்விட்டர்!

தினசரி பயனர்கள் - 3 ஆண்டுகளாக தவறாக கணக்கு காட்டிய ட்விட்டர்!
தினசரி பயனர்கள் - 3 ஆண்டுகளாக தவறாக கணக்கு காட்டிய ட்விட்டர்!

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனமானது தனது தினசரி பயனர்களின் எண்ணிக்கையை கடந்த மூன்றாண்டுகளாக தவறாக கணக்கிட்டு உயர்த்தி காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ட்விட்டர் பயனர்களின் வசதிக்காக கடந்த 2019-ம் ஆண்டு கணக்குகளை இணைக்கும் நடைமுறை (linked accounts) அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தவர்களின் கணக்குகளை சென்று பார்ப்பதில் உள்ள சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த முறை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், தினசரி பயனர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, இந்த இணைப்புக் கணக்குகளையும் தனித்தனி பயனர்களாக கருத்தில்கொண்டு தவறுதலாக கணக்கிடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, கடந்த மூன்றாண்டுகளாக ஒவ்வொரு காலாண்டிலும் 14 லட்சம் முதல் 19 லட்சம் தினசரி பயனர்கள் அதிகரித்து வருவதாக தவறாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த தவறு கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டபிறகு எடுத்த கணக்கீட்டின்படி, தினசரி பயனர்களின் மொத்த எண்ணிக்கை 22.9 கோடி எனத் தெரியவந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்த தினசரி பயனர்களின் எண்ணிக்கையை விட 15.9 சதவீதம் அதிகமாகும் என அந்த அறிக்கையில் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com