பிரசவத்தில் கோமாவுக்கு சென்ற தாய்: விற்கப்பட்ட குழந்தைகள்.. 19 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!

'சீதா அவுர் கீதா' என்ற படத்தைப் போன்றே ஓர் உண்மைச் சம்பவம் ஜார்ஜியாவில் நடைபெற்றுள்ளது.
ஜார்ஜியா சகோதரிகள்
ஜார்ஜியா சகோதரிகள்ஃபேஸ்புக்

'சீதா அவுர் கீதா' படத்தைப் போன்றே உண்மைச் சம்பவம்

குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவது இந்தியாவில் மட்டுமல்ல, உலக முழுவதுமே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுடைய எதிர்காலக் கனவுகளையே சிதைக்குமளவுக்கு பல சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்படி, குழந்தைகளின் கடத்தலை வைத்து பல திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில், 1972ஆம் ஆண்டு, ரமேஷ் சிப்பியின் இயக்கத்தில் 'சீதா அவுர் கீதா' என்ற படம் பாலிவுட்டில் வெளியானது. இப்படத்தில் இரு சகோதரிகள் பிரிந்துசென்று பின் இணைவது காட்டப்பட்டிருக்கும். இந்தப் படத்தைப் போன்றே ஓர் உண்மைச் சம்பவம் ஜார்ஜியாவில் நடைபெற்றுள்ளது.

twins baby
twins babyfreepik

ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அனோ சர்டானியா (Ano Sartania). 21 வயதான இவருடைய தோழிகள், அவரிடம் சென்று ‘தலைமுடியின் நிறத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டு நடனமாடி வலைதளத்தில் ரீல்ஸ் போடுவது நீதானே’ எனக் கேட்டுள்ளனர்.

தோழிகள் அப்படி திடீர் எனக் கேட்டதும் அவர் அதிர்ந்துபோயுள்ளார். ‘தாம் இல்லை’ என அவர் கூறியபோதும் தோழிகள் அதை நம்பவில்லை. பின்னர், அவரது தோழிகள் சில வீடியோக்களைக் காட்டி, ‘இப்போதாவது பார்... இதிலிருப்பது நீதானே’ எனக் கேட்டுள்ளனர். அப்போது அவர் அந்த வீடியோக்களைத் திகைத்துப்போய்ப் பார்த்துள்ளார்.

இதையும் படிக்க: ஒளியிலே மறைந்த இளையராஜா வீட்டு இளவரசி; தூரமாய்ச் சென்ற ‘பவதா’ எனும் பவதாரிணியின் நினைவலைகள்!

இரட்டைச் சகோதரிகள் சந்திப்பு: பிரசவத்தில் கோமாவுக்குச் சென்ற தாய்

காரணம், அதிலிருந்தது அவரைப்போன்றே ஒரு முகம். இதனால்தான் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். எனினும் அதிலிருந்து விடுபட்டு இது எப்படி சாத்தியம், இதில் ஏதோ மர்மம் எனக் கணக்குப்போட்டு அதுகுறித்த தேடலில் இறங்கியுள்ளார். இறுதியில் அந்த வீடியோவில் இருக்கும் நபரைக் கண்டுபிடித்துள்ளார், அனோ. அவர் பெயர் அமி க்விதா (Amy Khvitia) என்பதும் அவருக்கும் 21 வயதுதான் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் தனது சகோதரி என்பதும், தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்பதும் தெரியவந்துள்ளது.

உண்மை என்னவென்றால், ஜார்ஜியா நாட்டில், குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரித்து சட்டவிரோதமாக தத்துக் கொடுக்கும் கும்பல் சர்வசாதாரணமாக நடமாடுகிறது. இதற்கு சில மருத்துவமனைகளும், செவிலியர்களுமே உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், அனோ மற்றும் அமியின் தாயாருமான அஷா சோனியும் (Aza shoni) பிரசவத்திற்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும் அந்தப் பிரசவத்தில் அஷாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட ஒருகட்டத்தில் கோமாவுக்கே சென்றுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் முதல்முறை: நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்.. ஏன், எதற்காக, எப்படி?

இந்த நிலையில் அவருடைய குழந்தைகள் இறந்துபோய்விட்டதாக, அஷாவின் கணவர் கோச்சா காக்காரியாவிடம் (Gocha Gakharia) பொய்சொன்னதுடன், அந்தக் குழந்தைகளையே செவிலியர்கள், கருப்புச் சந்தையில் விற்றுவரச் சொல்லியிருக்கின்றனர். அவரும், அந்தக் குழந்தைகளை விற்றுவிட்டு வந்துள்ளார். பின்னாளில் அனோ மற்றும் அமி ஆகிய இருவரும் வெவ்வேறு தம்பதிகளிடம் வளர்ந்துள்ளனர். எனினும் சில மைல் தொலைவுள்ள பகுதிகளில்தான் இருவரும் வசித்துள்ளனர்.

twins baby
twins babyfreepik

வீடியோ மூலம் இருவரும் இணைந்ததுடன், தன் கடந்தகால வாழ்க்கை குறித்து அறிந்துகொண்டு அவர்கள் தம்முடைய உண்மையான அன்னையையும் தேடியுள்ளனர். இறுதியில் அவரது முயற்சி வெற்றிபெற்றது. அவர்கள் ஜெர்மனியில் இருப்பதை அறிந்து அங்குச் சென்று இருவரும் சந்தித்துள்ளனர். தன் பிள்ளைகள் பிரசவத்திலேயே இறந்துவிட்டதாக 19 ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருந்த அஷா முன்பு, அனோ மற்றும் அமி போய் நின்று உண்மையை எடுத்துரைக்க, அவர்களைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார், அந்தத் தாய். இந்த சந்திப்பு 2021இல் நடந்திருந்தாலும், தற்போது பல ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com