\
வெவ்வேறு ஆண்டில் பிறந்த அதிசய இரட்டையர்கள்!

வெவ்வேறு ஆண்டில் பிறந்த அதிசய இரட்டையர்கள்!

வெவ்வேறு ஆண்டில் பிறந்த அதிசய இரட்டையர்கள்!
Published on

இரட்டையர்கள் என்றாலே ஒரே தினத்தில் பிறப்பது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண் - பெண் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் பிறந்த வருடம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரியா என்ற பெண்ணிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது டிசம்பர் 31 2017ல் சரியாக இரவு 11.58 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து 20 நிமிட இடைவெளியில் ஜனவரி 1  2018 ஆம் ஆண்டு மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இரட்டை குழந்தைகளின் பிறந்த ஆண்டு மாறியுள்ளது. இதனைக் கண்ட மருத்துவர்கள் ஆச்சரியத்தில் திகைத்துள்ளனர். மேலும், தனது 35 வருட மருத்துவசேவையில் இரட்டை குழந்தைகள் பிறந்த ஆண்டுகள் இது போன்று மாறியதில்லை எனவும் அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் சைட் டாம்ஜிடி தெரிவித்துள்ளார். பிறந்த ஆண்டுகள் மாறிப்போன இந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com