வைரலாகும் துருக்கி நபர்
வைரலாகும் துருக்கி நபர்முகநூல்

புகைபிடிக்கும் பழக்கத்தை விட வித்தியாசமான முயற்சி: சமூக வலைதளங்களில் வைரலாகும் துருக்கி நபர்!

புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையான நபர், அதிலிருந்து தன்னை விடிவித்து கொள்ள வித்தியாசமான செயல் ஒன்றை கையாண்டுள்ளார்.. அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on

உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகையிலை உட்கொள்வதால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளது. சமீபகாலமாக இதன் பழக்கமும் அதிகரித்து வருவதை காண முடிகிறது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தால், புகைப்பிடிப்பவர் மட்டுமல்ல, புகைப்பிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, புகைப்பிடிப்பவர்கள் வெளியே விடும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசிக்கும்போது இதனால் ஏற்படும் பாதிப்பை passive smoking என்று குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 1.2 மில்லியன் புகைபிடிக்காதவர்கள் (PassiveSmoking) இறக்கின்றனர்.

இப்படி இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையான நபர், அதிலிருந்து தன்னை விடிவித்து கொள்ள வித்தியாசமான செயலை ஒன்றை கையாண்டுள்ளார்.. அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

துருக்கியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் யூசெல். இவர் ஏறக்குறைய 26 ஆண்டுகளாக புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர். இவர், கிட்டதட்ட ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட் பாக்கெட்டுகள் சகஜமாக குடித்துவிடுவாராம். ஒரு நாள் இவரது புகைப்பிடிக்கும் பழக்கம் வீட்டினருக்கு தெரியவர, எப்படியாவது அதை விட்டுவிட வேண்டும் என்று, வற்புறுத்தியுள்ளனர்.

வைரலாகும் துருக்கி நபர்
வெறும் நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? உலகையே அதிர வைக்கும் ஸ்டார்பக்ஸ் அதிகாரியின் ஊதியம்!

இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அவர்களது மூன்று குழந்தைகளின் பிறந்தநாள் மற்றும் திருமணம் நாள்களில் யூசெல்லை அழைத்து புகைப்பிடிப்பதை விட்டு விட வேண்டும் என்று கட்டாயபடுத்தியுள்ளனர். அவரும், ‘இனிமேல் புகைப்பிடிக்க மாட்டேன்’ என்று உறுதியளித்துவிடுவாராம்.

ஆனால், சில நாட்களிலேயே அதை மீண்டும் செய்து விடுவாராம். இப்படி இருக்கும் பட்சத்தில்தான், அதிரடியாக ஒரு யோசனையை கையில் எடுத்து அதை திட்டமிட்டபடி நடைமுறையும் படுத்தியுள்ளார்.

இதற்காக, உலோகத்தினால் செய்யப்பட்ட கூண்டு வடிவ தலைக் கவசத்தால் தனது தலையை மூட முடிவு செய்தார். இதற்கான சாவி இவரது மனைவியிடம் மட்டுமே உள்ளது. எப்பொழுதெல்லாம் , சாப்பிட வேண்டுமே அப்பொழுதெல்லாம், கூண்டை அவரது மனைவி திறக்க அவர் சாப்பிட்டுக்கொள்வதும், மற்ற சமயங்களில், ஒரு ஸ்டாவை வைத்து பாட்டிலிருந்து தண்ணீரும் குடித்துகொள்வாராம்.

வைரலாகும் துருக்கி நபர்
மகாராஷ்ட்ரா: GBS நோய்த் தாக்குதலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணம்?

இப்படியாக நாட்களை கழித்து வருகிறார் யூசெல். புகைப்பிடிப்பதை விட்டுவிட்டாரா? இல்லையா? என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், யூசெல்லின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com