துருக்கி காட்டுத் தீ: 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு - தப்பிச் செல்லும் மக்கள்

துருக்கி காட்டுத் தீ: 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு - தப்பிச் செல்லும் மக்கள்
துருக்கி காட்டுத் தீ: 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு - தப்பிச் செல்லும் மக்கள்

துருக்கி நாட்டை அச்சுறுத்தி வரும் காட்டுத் தீயால் இதுவரை 8 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கார்களிலும் லாரிகளிலும் கூட்டங்கூட்டமாக தப்பிச்செல்கின்றனர்.

துருக்கியின் தெற்குப்பகுதியில் பல இடங்களில் காட்டுத் தீ கடந்த 7 நாட்களாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துவிட்டனர். 8 பேர் இறந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் உடல் கருகி இறந்துவிட்டன. 30 மாகாணங்களில் 136 இடங்களில் தீ எரிந்து வரும் நிலையில் அதை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.

ரஷ்யா, ஈரான், உக்ரைன், அஜர்பைஜான், ஸ்பெயின், குரோஷியா என பல நாடுகளைச் சேர்ந்த விமானங்களும் ஹெலிகாப்டர்களும், 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க போராடி வருகின்றன. எனினும் பலத்த காற்று காரணமாக தீயணைப்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தீ பரவியுள்ள இடங்களில் உள்ள சொகுசு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இரு அனல் மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தீயை அணைக்கும் பணியில் சரியாக செயல்படவில்லை என அதிபர் எர்டோகன் மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com