துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த வாரம் அமெரிக்க தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன.
இதன் மூலம் துருக்கியில் இருந்து யாரும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது. அதே போல் அமெரிக்கர்களும், துருக்கிக்கு செல்ல முடியாது. துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்படுத்த முயன்ற மதத் தலைவர் ஃபெதுல்லா குலேனுடன், தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கடந்த வாரம் அமெரிக்க தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டார்.