கடலில் படகு மூழ்கி 50 பேர் பரிதாப பலி!

கடலில் படகு மூழ்கி 50 பேர் பரிதாப பலி!
கடலில் படகு மூழ்கி 50 பேர் பரிதாப பலி!

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் 50 பேர் பலியாயினார்.

துனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்களில் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம் பெயர் வது வழக்கம். அப்படிச் செல்லும்போது அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும் வழக்கம். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக, துனியாவை சேர்ந்த 180 பேர் படகு ஒன்றில் புறப்பட்டனர். அந்தப் படகில்  75 முதல் 90 பேர் மட்டுமே செல்ல முடியும். அதிமான கூட்டம் காரணமாக படகில் தண்ணீர் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால் படகு மூழ்கத் தொடங்கியது. படகில் இருந்தவர்கள் பயத்தில் கடலில் குதித்தனர். அவர்கள் மூழ்கினர். 

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகினர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் ராணுவ விமானம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com