சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவில் நேற்று அதிகாலை பதிவான நிலையில், ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு எழுந்தன. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடலிலும் பேரலைகள் எழுந்தன. இதனால் ரஷ்யாவின் கிழக்குப் பகுதி கடற்கரைகள் மற்றும் ஜப்பானின் வடக்குப்பகுதி கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன? ஏன் சுனாமி ஏற்படுகிறது என்பது குறித்து Dr. Shaik Mohammad Hussain, Professor and Head (retd), Department of Geology, University of Madras இவரிடம் கேட்டபொழுது,
“நேற்று ரஷ்யாவில் ஏற்பட்டது மெகா நிலநடுக்கம். கடலுக்கு அடியில் 8.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட இத்தகைய நிலநடுக்கத்தால், ரஷ்யா, ஜப்பான் ஹவாய் தீவுகள், ஆஸ்திரேலியா இந்தோனேசியா மெக்ஸிகோ, மெலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையானது விடப்பட்டிருந்தது.
டிசம்பர் 26 2004 இல் அந்தமான் நிக்கோபார் தீவு சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவு கோலாக இருந்தது குறிப்பிடதக்கது. கடலுக்கடியில் டெக்னோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொளும் போதும், அல்லது தட்டுகள் ஒன்று கீழிறங்கி அல்லது மேல் எழும்போதும், அல்லது கடலுக்கு அடியில் உள்ள எரிமலைவெடிப்புகளாலும் கடல் அலைகள் சுனாமியாக மேலெழுகிறது. சுனாமி வேகம் ஒரு ஜெட் வேகத்தில் பயணப்படும்
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட வருடங்கள்
1883 இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததால் சுனாமி உருவானது.
2004 இல் சுமுத்ரா தீவில் கடலுக்கு அடியில் டெக்னோ தட்டுகள் நகர்வால் சுனாமி உருவானது.
2011ல் ஜப்பானில் கடலுக்கு அடியில் டெக்னோ தட்டுகள் நகர்ந்ததால் சுனாமி உருவானது அச்சமயம் நிறைய மக்கள் இறந்தனர்.
பசிபிக் ரிங் ஆப் ஃபயர்
இத்தகைய நிலநடுக்கங்கள் ரிங் ஆப் ஃபயர் என்று சொல்லக்கூடிய பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும்.
இப்பகுதியில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைவெடிப்புகள் அடிக்கடி நிகழக்கூடிய ஒரு பகுதியாகும்” என்று கூறுகிறார்.