\
Trump's Xi Remark Explained After Court Birthright Ruling
donald trump, xi jinpingx page

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை.. சீனாவுக்கு வாழ்த்து சொன்ன ட்ரம்ப்.. கிண்டல் பதிவால் சர்ச்சை!

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு நேரடியாகவே குடியுரிமை வழங்கப்படும் என்ற கொள்கையை ட்ரம்ப் ரத்து செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாகியிருக்கிறது.
Published on

அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுகிறது. இதுவேபிறப்புரிமை குடியுரிமை என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது டிரம்பின் நீண்டகால நிலைப்பாடு. சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை வழங்கக் கூடாது என்று அவர் நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

cuba pm answer on trump threatens venezuela crude oil issue
ட்ரம்ப்x page

ஆனால், அந்த முயற்சிக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம், பிறப்புரிமை குடியுரிமை தொடர்பான சட்டப் பாதுகாப்பை உடனடியாக நீக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தம் தொடர்கிறது. இதையடுத்து, இந்தத் தீர்ப்பு டிரம்பின் குடியேற்றக் கொள்கைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது

Trump's Xi Remark Explained After Court Birthright Ruling
"AI மனிதனைவிட அதிக செலவுமிக்கது" - எச்சரிக்கும் Nvidia நிறுவன அதிகாரி!

இந்தசூழலில் தான், சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்ரூத் சமூக வலைதளப்பதிவில், ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், சீனாவுக்கும் மிகப்பெரிய பிறப்புரிமை குடியுரிமை (Birthright Citizenship) வெற்றிக்காக வாழ்த்துகள்" என்று பதிவிட்டார்.

இந்தப் பதிவை பலர் சீனாவுக்கு டிரம்ப் தெரிவித்த பாராட்டாகப் புரிந்துகொண்டாலும், உண்மையில் அது ஒரு அரசியல் நையாண்டி என கூறப்படுகிறது. அமெரிக்காவின் தற்போதைய சட்டம் காரணமாக, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிலரும் பயன்பெறுவதாக டிரம்ப் நீண்ட காலமாகக் கூறி வருகிறார். அதனால்தான், "இந்தத் தீர்ப்பால் வெற்றி பெற்றது சீனா தான்" என்ற கிண்டல் தொனியில் அவர் இந்தப் பதிவை வெளியிட்டார்.

அமெரிக்க பிறப்புசார் குடியுரிமை
அமெரிக்க பிறப்புசார் குடியுரிமைweb

மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் 1898-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அமெரிக்கா Vs வோங் கிம் ஆர்க் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளது. சீன வம்சாவளியைச் சேர்ந்த வோங் கிம் ஆர்க் அமெரிக்காவில் பிறந்ததால், அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை உண்டு என்று அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியது. அதுவே இன்று வரை பிறப்புரிமை குடியுரிமைக்கான முக்கிய சட்ட அடிப்படையாக இருந்து வருகிறது.

எனவே, டிரம்பின் பதிவு சீனாவின் குடியுரிமைக் கொள்கையைப் பாராட்டியதோ அல்லது சீனா புதிய சட்டம் கொண்டு வந்ததற்கான வாழ்த்தோ அல்ல. அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, தனது குடியேற்றக் கொள்கைக்கு ஏற்பட்ட பின்னடைவை அரசியல் ரீதியாக சுட்டிக்காட்ட அவர் பயன்படுத்திய நையாண்டிப் பதிவாகவே இது பார்க்கப்படுகிறது.

Trump's Xi Remark Explained After Court Birthright Ruling
”இந்தியாவின் உதவியை நாடுவோம்..” - பாக். எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்.. PoK-இல் பதற்றம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com