\
Trumps Election Defeat: Whats Next for US Politics
donald trumpreuters

இனி, ட்ரம்பின் அதிகாரத்துக்கும் சிக்கல்.. அமெரிக்க அரசியலில் அடுத்து என்ன?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில், அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், எஞ்சிய பதவிக்காலத்தில் அவரது மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Published on: 

2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவருடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எந்தக் கட்சி கட்டுப்படுத்தும் என்பதைத் தீர்மானிக்கிறது. அதாவது, அதிபர் ட்ரம்பின் எஞ்சிய பதவிக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இனிவரும் காலங்களில், டொனால்டு ட்ரம்ப் இரண்டு சபைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியினரால் அவரது செயல்திட்டங்களைத் தடுக்கவும், அரசாங்கச் செலவினங்கள் குறித்து முடிவெடுக்கவும், மேலும் பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்கவும் முடியும்.

donald trump
donald trumpreuters

விரிவாகச் சொல்ல வேண்டுமானால், ட்ரம்ப் தனது கொள்கைகளையும் புதிய சட்ட மசோதாக்களையும் நிறைவேற்றுவது பெருமளவு முடக்கப்படும். சட்டமியற்றும் அதிகாரம் ஜனநாயகக் கட்சியினரிடம் செல்வதால், அவர்கள் கொண்டுவரும் தமக்கு உடன்பாடில்லாத மசோதாக்களைத் தடுக்க ட்ரம்ப் தனது 'வீட்டோ' அதிகாரத்தை மட்டுமே அதிகம் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மேலும், அவர் முன்னெடுத்துள்ள ஈரான் போர் விவகாரம் மற்றும் கடுமையான சுங்க வரி விதிப்புக் கொள்கைகளுக்கு ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். இதனால் சர்வதேச விவகாரங்களில் தனது தற்போதைய தீவிரமான நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ள வேண்டிய அல்லது சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தத் தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்னைகள் மற்றும் ஈரான் போர் போன்றவற்றுக்கு எதிரான மக்களின் அதிருப்தியாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தனது ஆதரவாளர்களை பெருமளவில் நம்பியிருந்த ட்ரம்பிற்கு இந்தத் தோல்வி ஓர் அரசியல் பின்னடைவாகும்.

donald trump
donald trumpreuters

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, டீசல் விலை உயர்வு மற்றும் ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் ஆகியவை ட்ரம்பிற்கும் குடியரசுக் கட்சியினருக்கும் பெரும் தலைவலியாக அமைந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த தேர்தலில் ட்ரம்பின் முதற்கட்டத் தேர்வுகளும் அவரது செல்வாக்குமே முக்கியக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், கட்சிக்குள் அவரது ஆளுமை குறித்தும் கேள்வி எழுப்பப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாவிட்டாலும், டொனால்டுக்கு கணிசமான அதிகாரங்கள் தொடர்ந்து இருக்கும். நாடாளுமன்றத்தின் அதிகார சட்டமன்ற நடவடிக்கை எதுவுமின்றி, அவரால் நிர்வாக உத்தரவுகள் மூலம் முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.

அமெரிக்க அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஓர் அதிபர் 'வீட்டோ' செய்யலாம். அதிபரின் வீட்டோவை மீறுவதற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. குடியரசுக் கட்சியினரின் உதவியின்றி ஜனநாயகக் கட்சியினரால் இதை அடைவது சாத்தியமில்லை. முன்னதாக, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தால் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவையும் வீட்டோ செய்ய முடியும்; அதாவது, தேவைப்பட்டால் ஜனநாயகக் கட்சியின் சட்டங்களை வீட்டோ செய்வேன் எனத் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், தனக்கு ‘திரு. வீட்டோ’ என்ற பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்டார்.