அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்புடன் மோதுகிறாரா ஜோ பிடன் ?

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்புடன் மோதுகிறாரா ஜோ பிடன் ?
அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்புடன் மோதுகிறாரா ஜோ பிடன் ?

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தீர்மானிக்க, முதலில் கட்சிக்குள்ளேயே தேர்தல் நடக்கும். அமெரிக்காவின் இரு பெருங்கட்சிகளும் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக காகஸ், பிரைமரி என இரு வழிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல்களை நடத்துகின்றன.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும் தினம்தான், "சூப்பர் செவ்வாய்". அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு மாநிலத்திலும், கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்து பெரும்பான்மை ஆதரவு பெறுகிறவர்களை வேட்பாளராக அறிவிப்பர். அதன்படி இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் கடந்த செவ்வாய் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா, டெக்ஸஸ் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அலாபாமா, மின்னஸோட்டா, வடக்கு கரோலினா, டென்னசி உள்ளிட்ட 10 மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றிப்பெற்றார். கலிபோர்னியா, வெர்மாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார். மூன்றாவது இடத்தை எலிசபெத் வாரன் தன்வசப்படுத்தியுள்ளார். இதேபோல் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிடும் அதிபர் ட்ரம்ப் 86 பிரதிநிதிகளின் ஆதரவுடன் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியில் யாரும் போட்டியிடவில்லை.

ஜனநாயகக் கட்சியில் 566 பிரதிநிகளின் வாக்குகளை வென்று, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் பெர்னி சாண்டர்ஸ் 501 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் 61 பிரதிநிதிகளின் ஆதரவுடன் எலிசபெத் வாரனும், அடுத்த இடத்தில் மைக்கேல் ப்ளூம்பெர்க்கும் உள்ளனர்.

ஜோ பிடன், பெர்னி சாண்டர்ஸ்க்கு இடையே குறைந்தளவு வாக்குகள் வித்தியாசமே இருக்கும் நிலையில் இருவரில் ஒருவர் ஜனநாயக கட்சி சார்பில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com