\
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிப்போம்... ட்ரம்ப் சபதம்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிப்போம்... ட்ரம்ப் சபதம்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிப்போம்... ட்ரம்ப் சபதம்
Published on

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சபதம் செய்துள்ளார்.

வாஷிங்டனில் பேசிய அவர், அமெரிக்காவை பாதுகாப்பு மிகுந்த நாடாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயங்கரவாத ஒழிப்பு இருக்கும் என்று கூறினார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிப்பது தொடர்பாக விரிவான செயல்திட்டம் தயாரிக்குமாறு ராணுவ அமைச்சர் ஜிம் மேட்டிஸ்க்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். இதற்காக ராணுவம் மேலும் வலிமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவுக்குள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் முறையான ஆவணங்கள் இன்றி வருவதாகவும் அவர்களை தடுப்பது அவசியம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com