\
பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடலழகை வர்ணித்த ட்ரம்ப்

பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடலழகை வர்ணித்த ட்ரம்ப்

பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடலழகை வர்ணித்த ட்ரம்ப்
Published on

பிரான்ஸ் அதிபரின் மனைவியின் உடலழகை  வர்ணித்துப்பேசிய விவகாரத்தில்  அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். 
கடுமையான கருத்துகளைத் தெரிவிப்பது, உலகத்  தலைவர்களுடன் பேசும்போது அலட்சியமான  உடல்மொழியை வெளிப்படுத்துவது போன்றவற்றால்  அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப், அவற்றையெல்லாம் விடக்  கடுமையான சர்ச்சையில் இப்போது சிக்கியிருக்கிறார்.  பிரான்ஸ் நாட்டில் சுற்றுப் பயணம்  மேற்கொண்டிருக்கும் அவர், பிரான்ஸ் அதிபர்  மேக்ரோனின் மனைவியின் உடலை வர்ணித்துப்  பேசியது இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி  இருக்கிறது.
பிரான்ஸில் நெப்போலியன் நினைவு தினத்தின் 17  நூற்றாண்டு விழா ஹோட்டல் டெஸில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோனுடன், அவரது மனைவி  பிரிஜிட் மேக்ரோனும் கலந்து கொண்டார்.  அப்போது  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த அமெரிக்க அதிபர்  ட்ரம்பை  அவர்கள் இருவரும் வரவேற்றனர். இந்த  நிகழ்ச்சி  பிரான்ஸ் அதிபரின் அதிகாரப்பூர்வ  ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  அப்போது வரவேற்ற பிரன்ஸ் அதிபரின் மனைவி   பிரிஜிட் மேக்ரோனுக்கு முத்தம் வழங்கிய ட்ரம்ப்,  ’இது ஒரு சிறந்த தருணம். நீங்கள் நல்ல வடிவில்  அழகாக இருக்கிறீர்கள்’ எனக் கூறினார். பேஸ்புக்கில்  பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ட்ரம்பின்  இத்தகைய நடத்தைக்கு பலரும் எதிர்ப்புத்  தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com