\
Trump threw the microphone
ட்ரம்NBC Interview

பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்வி.. மைக்கை தூக்கி வீசி வெளியேறிய டிரம்ப்: அந்த கேள்வி என்ன தெரியுமா?

பெண் தொகுப்பாளர் கேள்வியால் அதிருப்தியடைந்த டிரம்ப், மைக்கை தூக்கி வீசி வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் டிரம்ப் NBC தொலைக்காட்சியின் 'மீட் தி பிரஸ்' (Meet The Press) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொகுப்பாளரின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார்.

NBC நிறுவனத்தின் பெண் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர், டிரம்ப்பிடம் ஈரான் போர், உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு டிரம்ப் பதிலளித்தார்.

பின்னர் கிறிஸ்டன் வெல்கர் கலிபோர்னியாவில் நடைபெறும் தற்போதைய தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் கூறிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நான்கு நாட்கள் ஆகியும் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் எதிர்கட்சியினரான ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் மோசடி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

அப்போது இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர் கேட்க, அதற்கு நான் அதனை கவனித்து சொல்வதே போதுமானது எனக் கூறினார். உடனடியாக உங்கள் கருத்தை மட்டுமே ஆதாரமாக ஏற்க முடியாதே என்ற தொகுப்பாளர் கூற, அதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், உங்களைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும் நேர்மையற்றவர்கள், நீங்கள் ஒரு முட்டாள் என காட்டமாக பதிலளித்தார்.

மேலும், ஊடகத் துறையை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்றும், ஏனென்றால், நேர்மையற்ற ஊடகங்களைக் கொண்ட ஒரு நாடு ஒருபோதும் சிறந்த நாடாக இருக்க முடியாது என்றும் கூறி மைக்கை தூக்கி வீசி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண ஆளுநர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல்களுக்கான முதற்கட்டத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், முதற்கட்ட வாக்குகள் எண்ணப்பட்டபோது ட்ரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்தார். பின்னர் தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது அது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் முன்னிலைக்கு வந்தார். இதனை குறிப்பிட்டே டிரம்ப் மற்றும் அவரின் குடியரசுக் கட்சியினர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறினர். அதே நேரம் கலிபோர்னியாவின் 80% வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலமே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trump threw the microphone
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவிய ஈரான்.. லெபனான் தாக்குதலுக்கு பதிலடி.? அதிகரிக்கும் பதற்றம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com