அமெரிக்காவின் அணுஆயுதம் வலிமையானது: வடகொரியாவுக்கு ட்ரம்ப் பதிலடி

அமெரிக்காவின் அணுஆயுதம் வலிமையானது: வடகொரியாவுக்கு ட்ரம்ப் பதிலடி
அமெரிக்காவின் அணுஆயுதம் வலிமையானது: வடகொரியாவுக்கு ட்ரம்ப் பதிலடி

அமெரிக்காவின் அணுஆயுதப் பொத்தான் வலியமையானது என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் வடகொரியாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சுமுகமான சூழலுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவும் வடகொரியாவும் தொடர்ந்து சொற்போரில் ஈடுபட்டிருக்கின்றன. வட கொரியாவின் அணு ஆயுதத்திற்கான பொத்தானைவிட அமெரிக்காவின் அணு ஆயுதப் பொத்தான் வலிமையானது என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

முன்னதாக அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பொத்தான் எப்போதும் தன்னுடைய மேஜையிலேயே இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்தார். இதனால் சர்வதேச அளவிலான சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அவரின் கருத்து, ட்ரம்ப் பதில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com