கொரோனா பாதிப்பில் இருந்து மீள அமெரிக்க குடிமகன்களுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்க திட்டம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீள அமெரிக்க குடிமகன்களுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்க திட்டம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீள அமெரிக்க குடிமகன்களுக்கு ரூ.1 லட்சம் நிதி அளிக்க திட்டம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 208,746 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8938 ஆக உள்ளது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் கடினமானதாக உள்ளதாகவும் ஆனால் இதிலிருந்து நாடு விரைவில் மீளும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு, ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் அந்நாட்டு அரசு ஒரு லட்சம் ரூபாய் நிதி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யவும், அவரவர் வங்கிக் கணக்கில் இரண்டு முறை தவணையாக செலுத்தவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல, பொருளாதாரத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com