''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி

''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி
''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து இருவரும் விரி‌வாக விவாதித்தனர். சிங்கப்பூரில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் வடகொரியாவின் மூத்த அரசு பிரதிநிதி கிம் யாங் சோல் இடையே இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இந்தக் கூட்டம் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் வடகொரியாவுடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிகாரியுடனான சந்திப்பு வேறொரு நாளில் நடக்கும் என்றும், வடகொரியவுடனான நட்புறவு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலேயே சென்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com