“கொரோனாவால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இறக்கலாம்” : ட்ரம்ப் கணிப்பு

“கொரோனாவால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இறக்கலாம்” : ட்ரம்ப் கணிப்பு

“கொரோனாவால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இறக்கலாம்” : ட்ரம்ப் கணிப்பு
Published on

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இறக்கலாம் என அதிபர் ட்ரம்ப் கணித்துள்ளார்.

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை புரட்டி எடுத்துள்ளது. இதுவரை அங்கு 11,88,870 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 68,606 பேர் உயிரிழந்துள்ளனர். 1,78,594 பேர் சிகிச்சை பலன் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை செல்லலாம் என அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், “நாம் கொரோனா வைரஸால் 75,000, 80,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை இழக்க நேரிடலாம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், “அமெரிக்காவை நாம் எப்போதும் மூடி வைத்திருக்க முடியாது அல்லது நாட்டிலிருந்து வெளியேற முடியாது. இந்த கொரோனாவிற்கு இந்த வருடத்தின் இறுதியில் நாம் மருந்தை கண்டுபிடிப்போம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதை மருத்துவர்கள் தான் கூற முடியும். நாம் கூற முடியாது. இருப்பினும் நாம் விரைவில் மருந்து கண்டிபிடிப்போம் என நம்புகிறேன். இந்த இலையுதிர்காலத்தில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி சென்று திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். இந்தக் கொரோனாவால் அமெரிக்க 6 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இழக்கும். ஏற்கெனவே 3 ட்ரில்லியன் இழந்துவிட்டோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com