மரியா புயலால் சின்னாபின்னமான பியூர்‌டோ ரிகோ: ட்ரம்ப் வேதனை

மரியா புயலால் சின்னாபின்னமான பியூர்‌டோ ரிகோ: ட்ரம்ப் வேதனை
மரியா புயலால் சின்னாபின்னமான பியூர்‌டோ ரிகோ: ட்ரம்ப் வேதனை

மரியா புயலின் கோர தாண்டவத்தால் பியூர்டோ ரிகோவில் பல கோடி ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.

கரீபியன் தீவுகளை மிரட்டி வந்த மரியா புயல் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சொந்தமான பியூட்டோ ரிகோ தீவை தாக்கியதில், முழுத்தீவும் சின்னாபின்னமானது. மின் இணைப்புகள், தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், மறுசீரமைப்புக்கான பணிகள் முழு வீச்சில் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பியூர்டோ ரிகோவின் நிலை குறித்து அடுத்தடுத்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மரியா புயலின் கோர தாண்டவத்தால் அந்த தீவுக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மின் இணைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், முழுத்தீவும் அழிந்துவிட்டது என்றும், இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பில் இருந்து அந்த தீவு எப்படி மீண்டு வரப் போகிறது என தெரியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com