வடகொரிய அதிபர் கிம்மை நல்ல உடல் நலத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி - ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம்மை நல்ல உடல் நலத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி - ட்ரம்ப்
வடகொரிய அதிபர் கிம்மை நல்ல உடல் நலத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சி - ட்ரம்ப்

வடகொரிய அதிபர் கிம்மை நல்ல உடல் நலத்துடன் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

வடகொரியாவின் நிறுவனத் தலைவரும், தற்போதைய அதிபரின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழா கடந்த மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வடகொரியாவின் மிக முக்கியமான இந்த விழாவில், அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்காதது பல ஊகங்களுக்கு வித்திட்டது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், உரத் தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் கிம் பங்கேற்றார் பொது நிகழ்ச்சியில் கிம் ஜாங் உன் பங்கேற்ற புகைப்படங்களை சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தானும் மற்றவர்களைப் போன்று, கிம் நல்ல உடல் நலத்துடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தியது. இதனால் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்புக்கும் வடகொரியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேரில் சந்தித்து பேசினர். வியட்நாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரு கொரிய நாடுகளும் இணையும் இடத்தில் இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசினர். தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால் மட்டுமே, அணு ஆயுதங்களை கைவிட முடியும் என வடகொரியா கூறிய நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனினும் வடகொரிய அதிபர் கிம்மை, தனது நண்பர் என்றே ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com