விமான விபத்து
விமான விபத்துமுகநூல்

அமெரிக்கா: விமான விபத்தில் உயிரிழந்த 67 பேர்; முந்தைய ஆட்சியாளர்களை குற்றம்சாட்டிய அதிபர்!

விமானப் போக்குவரத்து துறையில் திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே வாசிங்டன் விமான விபத்துக்கு காரணமென அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
Published on

விமானப் போக்குவரத்து துறையில் திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே வாசிங்டன் விமான விபத்துக்கு காரணமென அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

வாசிங்டன் நகரில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த விபத்துக்கு பின்னால் சதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறிய ட்ரம்ப், விமான பாதுகாப்பு நடைமுறை தரத்தை முந்தைய ஆட்சியாளர்கள் குறைத்துவிட்டதாக விமர்சித்தார்.

விமான விபத்து
Top World News | உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி முதல் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சாதனை வரை!

வாசிங்டன் நகரில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானத்தின் மீது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மோதி அருகில் உள்ள போடோமெக் ஆற்றில் விழுந்தது. தற்போது வரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில், அங்கு 200க்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com