ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட்.... 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்

ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட்.... 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்

ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட்.... 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்
Published on

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ஒரு ட்வீட் அமேசான் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், அமெரிக்காவில் தொடர்ந்து ஆன்லைன் விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2017 ஆம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உடன் போட்டி போடும் அளவிற்கு பங்கு சந்தையில் முதலீடு செய்து அமேசான் நிறுவனம் முன்னேறியுள்ளது. பெரும் பணக்காரர் பட்டியலில் வாரன் பஃபட் இரண்டாவது இடத்திலும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் நேற்று ட்வீட்டரில் பதிவிட்ட ஒரு பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், “அமேசான் நிறுவனத்தால் வரி செலுத்தும் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களின் வியாபாரத்தை அமேசான் நிறுவனம் முடக்கியுள்ளது. வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன் வேலைவாய்ப்புகளையும் பலர் இழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

ட்ரம்பின் ட்வீட் வெளியான இரண்டு மணி நேரத்தில் அமேசான் நிறுவனத்தின் 5.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com