சிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு
சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அண்மையில் டவ்மாவில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதலை அடுத்து பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் உடன் இணைந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் ரசாயன ஆயதங்கள் இருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிரியா அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை கைவிடும்வரை தங்கள் தாக்குதல் தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் தங்கள் படைகளும் ஈடுபடுவதை உறுதி செய்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சிரியா மீதான அமெரிக்க கூட்டணி நாடுகள் தாக்குதலால் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு மேலும் சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.