உலகம்
ட்ரம்ப் மிரட்டல்.. இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்!
ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பால், இந்தியா வரும் எரிவாயு கப்பல்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் அனைத்து வணிகக் கப்பல் போக்குவரத்துக்கும் அனுமதி கிடையாது என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பால், இந்தியா வரும் எரிவாயு கப்பல்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுகிறது. குறிப்பாக போர் தொடங்கிய பிறகு, 20க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் மூலம் எல்பிஜி, எல்என்ஜி எரிவாயுவை ஏற்றி வந்துள்ளன. இத்தகைய சூழலில், ட்ரம்ப்பின் அறிவிப்பால் மீண்டும் இந்தியா வரும் எரிவாயு கப்பல்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.