உலகம்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ஜஸ்டர்: டிரம்ப் பரிந்துரை
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக ஜஸ்டர்: டிரம்ப் பரிந்துரை
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்படவுள்ளார்.
அவரை டிரம்ப் நியமிக்க உள்ள நிலையில் அதற்கு சென்ட் உறுப்பினர்களின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்தவர் ஜஸ்டர். தற்போது அமெரிக்க அதிபரின் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான துணை உதவியாளராக இருந்து வருகிறார். இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என டிரம்ப் அண்மையில் கூறியிருந்த நிலையில் ஜஸ்டரை தூதராக நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார்.