ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்கா அழைக்க ட்ரம்ப் விரும்புவதாகவும், ஆனால் இதுவரை அழைப்பு எதுவும் விடுக்கவில்லை எனவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தபோது, அதிகாரிகளிடம் ட்ரம்ப் தனது விருப்பத்தை வெளியிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது சரியான தருணம் அல்ல என ட்ரம்ப் தெரிவித்தாகவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ட்ரம்பின் மகனான ட்ரம்ப் ஜூனியரும் அதிபர் தேர்தல் பரப்புரையில் ரஷ்யாவின் தொடர்பு இருந்தது என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.