’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்

’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்

’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்
Published on

அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளைமாளிகையை விட்டு அதிபர் ட்ரம்ப் வெளியேறினார்.

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் ஏற்கெனவே ட்விட்டரில் அறிவித்திருந்தபடி வெள்ளை மாளிகையைவிட்டு அதிபர் ட்ரம்ப் வெளியேறினார். 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார் ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் ட்ரம்ப், தான் சிறந்த நிர்வாகத்தை அளித்ததாக அமெரிக்க மக்களிடம் ஆற்றிய பிரிவு உபசார உரையில் தெரிவித்தார். அதில், ‘’எங்கள் ஆட்சியில் பெரிய அளவில் வரிகளைக் குறைத்தேன், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். எந்த அமெரிக்க அதிபரும் இதுவரை பெறாத அதிக ஆதரவைப் பெற்றிருந்தேன். பைடன் ஆட்சியில் வரிகள் உயர்த்தப்படும் என்று நம்புகிறேன்.

அதேபோல் கொரோனா தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினோம். 5,10 ஆண்டுகளில்கண்டுபிடிக்கக்கூடிய கொரோனா தடுப்பூசியை 9 மாதங்களில் கண்டுபிடித்தோம். அமெரிக்க மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடுவேன். அமெரிக்க அதிபராக என்னை தேர்ந்தெடுத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். விரைவில் மீண்டும் சந்திப்போம். லவ் யூ ஆல்’’ என்று தனது உரையை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் ஏறி கிளம்பினார்.

வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில், பதவி முடியும் அதிபர் புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்தளிப்பார். பின்னர் இவர்கள் இணைந்து சென்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். ஆனால் அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக பதவியேற்பு விழாவை புறக்கணித்துவிட்டு ஃப்ளோரிடாவில் உள்ள பண்ணைவீட்டிற்கு செல்கிறார் ட்ரம்ப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com