ட்ரம்ப் - கிம் சந்திப்பு; சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், நாளை சிங்கப்பூரில் சந்திக்கின்றனர்.
ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நாளை சிங்கப்பூரில் நடக்கவுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்தம் வாய்ந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளிலும் நடக்காமல் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடக்கிறது. இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட பல காரணங்கள் உள்ளன. அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் சுமூக உறவைக் கொண்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் வடகொரியாவுக்கான தூதரக உறவே இல்லை.
எனினும், வடகொரியா தூதரகம் அமைத்துள்ள மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பதால் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த இடமாக தேர்வானது. நீண்ட காலமாக சிங்கப்பூர் வழியாக வடகொரியா வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதற்கு சிங்கப்பூரில் தடை இருப்பதால் இரு தலைவர்களும் சந்திக்க ஏதுவான இடமாக சிங்கப்பூர் தேர்வாகியுள்ளது.