வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். போதிய பாதுகாப்பின்மை, ஒத்துழைப்பு வழங்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த 8 நாடுகள் மீதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவை பாதுகாப்பு மிக்க நாடாக உறுதிப்படுத்துவதே தமது முதல் கடமை என்றும் இதற்காகவே இந்த பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் இந்த தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த சூடானுக்கு மட்டும் தடை விலக்கப்பட்டுள்ளது.