\
trump
trump AI - PT

கியூபா மீது பிடியை இறுக்கும் டிரம்ப்.. போருக்கு தயாராகிறதா அமெரிக்கா?

கியூபாவின் எரிசக்தி நெருக்கடியை தீவிரப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. புதிய பொருளாதாரத் தடைகள் மூலம் கியூபா அரசை முடக்க முயலும் நிலை உருவாகியிருக்கும் சூழலில் அமெரிக்கா போருக்கு தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on
Summary

எரிபொருள் பற்றாக்குறை, நீண்ட மின்வெட்டு, ஹவானாவில் போராட்டங்கள் தொடரும் நிலையில், டொனால்டு டிரம்ப், கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு தடைகள் விதித்தும், கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்ட உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நிறுவனங்கள் மற்றும் காஸ்ட்ரோ குடும்பத்தின் ஒரு உறுப்பினர் மீதும் புதிய தடைகளை விதித்துள்ளார்.

செய்தியாளர் - M. மீரா

வெனிசுலாவும் கியூபாவும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்த நிலையில், கியூபாவின் எரிவாயு தேவையை வெனிசுலாவே பூர்த்தி செய்துவந்தது. ஆனால், வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், கியூபா முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் நீண்டகால மின்வெட்டுகளுக்கு வழிவகுத்ததோடு, ஹவானாவில் பொதுப் போராட்டங்களையும் தூண்டியது.

power cut in Cuba
power cut in Cuba web

அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் வரிகள் மற்றும் தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தி, கடுமையான பொருளாதார அழுத்தத்தை விதித்து வருகிறார். கியூபாவின் எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காண இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் பதட்டங்கள் தொடர்கிறது.

இந்த எரிசக்தி நெருக்கடியின் நோக்கம் கியூபா அதிபர் மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Díaz-Canel) பதவி விலகும்படி கட்டாயப்படுத்துவதே என்று அமெரிக்கா வெளிப்படையாகக் கூறியிருந்தது. இந்நிலையில் மீண்டும் டிரம்ப் நிர்வாகம் கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதித்து புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது.

Trump
Trump AI - PT

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட இந்தத் தொகுப்பில் குறிவைக்கப்பட்ட நபர் முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவின் மகனுமான அலெஜான்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பினின் மனைவியான அன்னாலி லில்லியம் ரூடா கார்டெரோ ஆவார். மேலும் ஐந்து கியூபா நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது .

trump
போரின் நோக்கம் மாறிவிட்டதா? அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஈரான்!!

இந்த நிறுவனங்கள் கியூபா அரசுக்கு நிதி ஆதாரங்களையும் வணிக ஆதரவையும் வழங்குகின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மாதிரியான நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் கியூபா அரசுக்கு வரும் வருவாயை குறைப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

தடை விதிக்கப்பட்ட GAESA (Grupo de Administración Empresarial, S.A.) என்ற நிறுவனம் கியூபாவின் பொருளாதாரத்தில் 40% முதல் 70% வரை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு ரகசிய, இராணுவத்தால் நடத்தப்படும் குழுமமாகும். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கூட்டு நிறுவனம் சுற்றுலா, வங்கி, தளவாடங்கள், சில்லறை வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றில் பரந்த அளவில் வணிகம் செய்து வருகிறது. இதனால் அமெரிக்க அரசு எப்போதும் இந்த நிறுவனத்தை குறிவைக்கும் .

சமீபத்திய நடவடிக்கைகள், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு பரந்த அமெரிக்கத் தடையின் ஒரு பகுதியாகும். இந்த புதிய தடைகள், டிரம்ப் நிர்வாகம் கியூபாவுக்கு எதிராக ஒரு மோதல் போக்கைத் தொடர விரும்புகிறது என்பதைக் குறிக்கிறது.

trump
தொடரும் விரிசல் |அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்ரேல்.. அதிரடி முடிவெடுத்த நெதன்யாகு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com