ஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம் - எச்சரிக்கும் ட்ரம்ப்

ஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம் - எச்சரிக்கும் ட்ரம்ப்
ஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலை பிரகடனம் - எச்சரிக்கும் ட்ரம்ப்

மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் விவகாரத்தில் ஒத்துழைக்காவிட்டால் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள், மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் வகையில், எல்லை சுற்றுசுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக கூடுதல் நிதியை ஒதுக்குவதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியினரும், ஆளும்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து அரசுப் பணிகளை முடக்கும் வகையில், ஊழியர்களுக்கு அதிபர் ட்ரம்ப் தாற்காலிக விடுமுறை அளித்துள்ளார். இதன் காரணமாக இரு வாரங்களாக அங்கு அரசுப் பணிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினரும், ஆளும்கட்சியினரும் ஒத்துழைக்காவிட்டால், நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

மேலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே சுவர் எழுப்பும் திட்டத்தை நிறைவேற்றப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com