உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் ட்ரம்பிற்கு பின்னடைவு
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் ட்ரம்பிற்கு பின்னடைவு
அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் ட்ரம்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என கின்னிபியாக் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் பேரும், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடனுக்கு ஆதரவாக 49 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ட்ரம்பைவிட ஜோபிடன் 8 சதவிகிதம் வாக்குகள் அதிகம் பெற்று கருத்துக் கணிப்பில் முன்னிலையில் உள்ளார்.
கொரோனா வைரஸை கையாண்ட விதம், வேலை இழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்னைகளே கருத்துக் கணிப்பில் ட்ரம்ப் பின்னடைவை சந்தித்ததற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.