\
trump announced the largest steel plant in US history
TRUMPANI

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை.. இந்தியாவுக்கு வாய்ப்பளித்த ட்ரம்ப்!

இத்திட்டத்தின் உற்பத்திப் பணிகள் 2030-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: 
Summary

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலை அமைக்கும் திட்டம், இந்தியாவின் எஸ்ஸார் குழுமத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலை அமையவிருக்கிறது. இந்த ஆலை, இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான மெசாபி மெட்டாலிக்ஸ் அமைக்கவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலை அமையவுள்ளது. தான் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரி கொள்கைகளே வெளிநாட்டு நிறுவனங்களை அமெரிக்காவில் நேரடியாக முதலீடு செய்யத் தூண்டும். இந்த ஆலை மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மலிவு விலையில் தரமான எஃகை உற்பத்தி செய்யும். இந்தத் திட்டம், மூலப்பொருள் கொள்முதல் முதல் எஃகு உற்பத்தி வரை ஒரு ஒருங்கிணைந்த விநியோக அமைப்பை உருவாக்கும். இது முற்றிலும் அமெரிக்காவிலேயே செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

donald trump
donald trumpreuters

அமெரிக்காவின் ஐயோவா (Iowa) மாநிலத்தில் 15 பில்லியன் டாலர் செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த ஆலை நிறுவப்படுகிறது. எஃகு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் 3 பில்லியன் டாலர் செலவில் புதிய இரும்புத் தாது சுரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் சுமார் 6,000 கட்டுமான வேலைவாய்ப்புகளும், உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளில் சுமார் 2,000 நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 18 பில்லியன் டாலர் (சுமார் ₹1.5 லட்சம் கோடி) ஆகும். இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சுமார் 95 பில்லியன் டாலர் மதிப்பைச் சேர்க்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் உற்பத்திப் பணிகள் 2030-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com